'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க?'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!.. பதபதைவைக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் அருகே செல்போனில் நீண்ட நேரம் பேசியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

'எதுக்கு இவ்வளவு நேரம் போன் பேசிட்டு இருக்க?'.. தாய் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!.. பதபதைவைக்கும் சோகம்!

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்தரை கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசு. இவரது மகள் ரோகிதா (வயது 20). ரோகிதா காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரோகிதா செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மன வேதனை அடைந்த அவர், தனது அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

 

மற்ற செய்திகள்