RRR Others USA

ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நபர் வச்ச கோரிக்கை.. திருவள்ளூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நபர் ஒருவருக்கு அந்த மாவட்ட கலெக்டர் உதவி செய்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆணிலிருந்து பெண்ணாக மாறிய நபர் வச்ச கோரிக்கை.. திருவள்ளூர் கலெக்டருக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

"அவர்கிட்ட சொல்லிவைங்க. தொலைச்சு கட்டிடுவேன்" கொந்தளித்த புதின் ..என்ன ஆச்சு..?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றில் கடந்த 2015 ஆம் ஆண்டு சந்தான ராஜ் என்பவர் பணிபுரிந்து வந்திருக்கிறார். இடையில் திடீரென்று விடுப்பில் சென்ற அவர் அதன்பிறகு பணிக்கு வரவில்லை. 7 ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்களும் கிடைக்கவில்லை.

அறுவை சிகிச்சை

சிறுவயதிலேயே தனக்குள் இருக்கும் பெண்மை குணத்தைக் கண்டு கொண்ட சந்தானராஜ் வீட்டை விட்டு வெளியேறி பாலின மாற்று அறுவை சிகிச்சையை எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு ஏற்பட்ட உடல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக தன்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை என கூறியிருக்கிறார்.

Tiruvallur collector offered Government job for Trans woman

வீட்டுக்கு வா

இந்நிலையில் சந்தான ராஜின் தாய் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி ஒருவழியாக அவரை கண்டுபிடித்துள்ளார். தனது தாயிடம் தன்னுடைய நிலைமை குறித்து அவர் தெரிவிக்க, 'என்ன ஆனாலும் சரி வீட்டுக்கு வா' என அன்போடு அழைத்து இருக்கிறார் அந்த தாய். தன்னுடைய அம்மாவின் பாச கட்டளையை ஏற்றுக்கொண்ட சந்தான ராஜ் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய பெயரை தாட்சாயினி என்றும் அவர் மாற்றி இருக்கிறார்.

கோரிக்கை

இந்நிலையில் தன்னுடைய நிலைமையை விலாவாரியாக குறிப்பிட்டு தன்னுடைய பணியை மீண்டும் வழங்க வாய்ப்பு இருக்கிறதா? என முதலமைச்சர் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினை தாட்சாயினி அனுப்பியிருக்கிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் தாட்சாயிணிக்கு மீண்டும் அதே பஞ்சாயத்தில் பணிபுரிவதற்கான பணி ஆணையை கடந்த 25 ஆம் தேதி வழங்கியுள்ளார்.

மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆட்சியாளர்," சில நேரங்களில் சின்ன சின்ன விஷயங்கள் அதிக முக்கியம் வாய்ந்தவையாக இருக்கும். கருணை மற்றும் இந்த விவகாரத்தில் பாலினம் சார் நுணுக்கமான உணர்வுகளை கருத்தில் கொண்டு தாட்சாயிணிக்கு மீண்டும் அவருடைய வேலை வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tiruvallur collector offered Government job for Trans woman

ஆணாக சென்று பெண்ணாக திரும்பிய தாட்சாயிணிக்கு மீண்டும் பணி ஆணையை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

‘அப்படி போடு’.. சிஎஸ்கே அணியில் இணைந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. அப்போ இனி ஆட்டம் வேறலெவல்ல இருக்குமே..!

TIRUVALLUR, TIRUVALLUR COLLECTOR, GOVERNMENT JOB, TRANS WOMAN

மற்ற செய்திகள்