"Night Show கேன்சல்..".. "பெரிய படம் வரப்போறது இல்ல"... முதல்வரிடம் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை! பரபரப்பு ஆடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கையை முன்வைத்து பேசியுள்ளார்.

"Night Show கேன்சல்..".. "பெரிய படம் வரப்போறது இல்ல"... முதல்வரிடம் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை! பரபரப்பு ஆடியோ!

திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழ்நாட்டில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகள் உள்ளிட்ட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு திரையரங்குகளின் கூட்டமைப்பு தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

tirupur subramaniam request to TN CM Over lockdown theatre rules

தியேட்டர்களில்தான் கொரோனா பரவுகிறதா? 

அதில், “மக்களின் நலன் கருதி தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் வரவேற்க வேண்டியவை. 2 ஆண்டுகளாகவே தியேட்டர்கள்  கொரோனாவால் மூடப்பட்டன. ஆனால் லாக்டவுன் என்றால் முதலில் தியேட்டர்கள் மூடப்படுவதற்கான காரணம் விளங்கவில்லை.

நைட் 10 மணிக்கு மேல ‘வெளியூர்’ கிளம்புறீங்களா..? அப்போ மறக்காம இதெல்லாம் ‘ஃபாலோ’ பண்ணுங்க..!

 

tirupur subramaniam request to TN CM Over lockdown theatre rules

இதுவரை யாரும் தியேட்டர்களில்தான் கொரோனா பரவுகிறது என சொல்லவில்லை. ஆனால் ஏனோ லாக்டவுன் என்றாலோ, கொரோனா அச்சுறுத்தல் என்றாலோ, முதலில் தியேட்டர்கள்தான்  மூடப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். இதுவரையில் எந்த அரசும் எந்த சலுகையும் நிவாரணமும் எங்களுக்கு வழங்கவில்லை. அண்டை மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் சலுகைகள் வழங்கப் பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் வழங்கப்படவில்லை.” என்று திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார.

பேச்சுவார்த்தை நடத்துங்கள்  - வேண்டுகோள்

மேலும் அந்த ஆடியோவில் அவர், “தியேட்டர் தொழிலை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஆவன செய்யப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, குறிப்பாக இரவு நேர ஊரடங்கு என்றால் யாரும் புதுப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள், பெரிய படங்களும் வரப்போவதில்லை, ஆடியன்ஸூம் வரமாட்டார்கள். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து எங்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

COVAXIN தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராசிட்டமால் தேவையா? பாரத் பயோடெக் விளக்கம்

tirupur subramaniam request to TN CM Over lockdown theatre rules

TIRUPUR SUBRAMANIAM, TN CM, LOCKDOWN THEATRE, திருப்பூர் சுப்பிரமணியம், கோரிக்கை, NIGHT SHOW கேன்சல், முதலமைச்சர்

மற்ற செய்திகள்