படிச்சது எல்லாம் ‘தமிழ் மீடியம்’ தான்.. ‘26 வயதில் நீதிபதி’.. குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ் வழியில் படித்து இளைஞர் ஒருவர் நீதிபதி ஆன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படிச்சது எல்லாம் ‘தமிழ் மீடியம்’ தான்.. ‘26 வயதில் நீதிபதி’.. குவியும் வாழ்த்து..!

உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் ஆதியான் (26 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் படித்த செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் மகாராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சீனிவாசன் மற்றும் திமுக செயற்குழு உறுப்பினர் சோலை ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

Tirupur justice who studied in Tamil medium

அப்போது பேசிய நீதிபதி ஆதியான், ‘இந்தப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பின்னர் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில்தான் படித்தேன். நீதிபதிக்கான தேர்வு எழுதுபோது, நான் மட்டுமே தமிழ் வழியில் கற்றவன். அதுதான் எனது அடையாளமானது. தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புரிந்து படிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழி மட்டும்தான்’ என அவர் கூறினார்.

TIRUPUR, JUSTICE, TAMILMEDIUM

மற்ற செய்திகள்