'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய 3-வது மாவட்டம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பாதித்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறியுள்ளது.
திருப்பூரில் இதுவரை 114 பேர் கொரோனாவால் பாதித்திருந்தனர். அதில் 112 பேர் ஏற்கெனவே சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடுதிரும்பினர். இதன் பின்னர் சில நாட்கள் திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த 2 லாரி ஓட்டுநர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த 2 லாரி ஓட்டுநர்களும் சிகிச்சை முடிந்து நேற்று காலை வீடு திரும்பினர்.
இதையடுத்து, அம்மாவட்டம் கொரோனா தொற்றிலா மாவட்டமாக மாறியிருக்கிறது. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்த திருப்பூர், ஆரஞ்சு மண்டலத்திற்கு விரைவில் மாற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 3-வது கொரோனா தொற்று இல்லாத மாவட்டம் ஆனது திருப்பூர்.
ஏற்கனவே ஈரோடு, சிவகங்கை கொரோனா இல்லாத மாவட்டங்களாக உள்ளன. அந்த வரிசையில் திருப்பூர் மாவட்டமும் இணைந்துள்ளது. இதையடுத்து அங்கு பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.