சொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்.

சொந்த ஊர் திரும்பிய 'தொழிலாளர்களுக்கு'... ரூபாய் 1 லட்சம் கடன் வழங்கும் 'தமிழக' மாவட்டம்... இதை மட்டும் செஞ்சா போதும்!

கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கால் பிற மாநிலங்களில் வேலை செய்து வந்த தமிழக தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலமாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது ஊரக தொழில்களை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் ஆகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் உடுமலை, அவினாசி, குண்டடம், பொங்கலூர், திருப்பூர் வட்டாரங்களை சேர்ந்த 122 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்த வேலை காரணமாக புலம் பெயர்ந்து கொரோனா காலத்தில் ஏற்பட்ட முழு முடக்கத்தால் மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வரை நீண்டகால கடனாக வழங்கப்படும்.

இந்த நிலையை பெற வெளியூருக்கு புலம் பெயர்ந்து சென்று பின்னர் சொந்த ஊர் திரும்பிய 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த நிதி உதவியை பெற உடுமலை, அவினாசி, குண்டடம், பொங்கலூர், திருப்பூர் வட்டாரங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் திருப்பூர் அருள்புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93445 85559, 93852 99723 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்