திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை... தையல் தொழிலாளி எழுதிய நாவல்!.. அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த 'மாபெரும் அங்கீகாரம்'!.. சாதித்துக் காட்டிய தமிழர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி எழுதிய 'சின்னானும் ஒரு குருக்கள் தான்' நாவலுக்கு வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் சிவராஜ் எழுதியுள்ள இந்த நாவல், அருந்ததியர் இளைஞர் ஒருவர் கோயில் அர்ச்சகராகுவதும், அதனைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் விஷயங்களையும் கதையாக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை அரசு சட்டமாக இயற்றி உள்ளது. ஆனால் கிராமங்களில் உள்ள கள யதார்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளதை நாவலாக்கியுள்ளதாக சிவராஜ் கூறியுள்ளார்.
இந்நாவலை 8 பேர் எம்.ஃபில் பட்டத்துக்கு ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்