வாழ்க்கையில அந்த 'ஒரு ஆசை' மட்டும் நிறைவேறவே இல்ல...! 'யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தப்போ தோணின ஐடியா...' - பட்டைய கெளப்பும் அமால் டுமால் ஆட்டோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடலில் குறைபாடு இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கையுடன் போராடி தன் சிறு வயது கனவை நிறைவேற்றியுள்ளார் திருப்பூரை சேர்ந்த அருண்.

வாழ்க்கையில அந்த 'ஒரு ஆசை' மட்டும் நிறைவேறவே இல்ல...! 'யூடியூப்ல ஒரு வீடியோ பார்த்தப்போ தோணின ஐடியா...' - பட்டைய கெளப்பும் அமால் டுமால் ஆட்டோ...!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்த 46 வயதான அருண் தனது சகோதரர்கள் இருவரது குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். அருணுக்கு சகுந்தலா (38) என்ற மனைவியும் மற்றும் 21 வயதில் ஆரோன் என்ற மகனும் உள்ளனர்.

அதோடு திரு.அருண் 5 வயதாக இருந்த போதே போலியோ தாக்கி தனது ஒரு காலினை இழந்துள்ளார். தன் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களின் ஊக்கம் மற்றும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே அருணுக்கு கார் ஓட்டவேண்டும் என்று ஆசையாம். ஆனால் அவரின் கால் போலியோவால் பாதிக்கப்பட்டதால் அந்த கனவை தனக்குள்ளே புதைத்துள்ளார்.

ஆனாலும் மனம் தளராத அருண், சரக்கு ஆட்டோ ஓட்டத்துவங்கி, தற்போது தனக்கு என சொந்தமாக வீடு, இரண்டு சரக்கு ஆட்டோ வாகனங்கள் உள்ளதாகவும், தனது மகன் ஒரு ஆட்டோ ஓட்டி வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஆனால் அருணின் அந்த கார் கனவு மட்டும் அழியாமல் அவரின் மனதில் இருந்துகொண்டே இருந்துள்ளது.

இந்நிலையில் தான் அருண், யூடியூப் மூலம் ஆட்டோவை கார் போல மாற்றலாம் என அறிந்து அதற்கான பணிகளை செய்ய மும்முரமாகியுள்ளார். அதன்காரணமாக உடனடியாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கியும் உள்ளார்.

அதன்பின் ஆட்டோவை காராக மாற்றுபாவரான, கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பளா பகுதியில் உள்ள அசோக் என்பவை தொடர்பு கொண்டு தனது வாகனத்தை மாற்றி அமைக்க துவங்கியுள்ளார்.

தனது தீரா ஆசை மற்றும் முயற்சியின் பலனாக 3 மாதங்கள் கழித்து அந்த ஆட்டோ காராக மாற்றப்பட்டு தற்போது இந்த வாகனத்தை அவிநாசி கொண்டு வந்துள்ளார்.

இந்த வாகனம் குஷன் இருக்கைகள், பக்கவாட்டு கதவுகள், பவர் விண்டோ, ஏராளமான எல்.இ.டி விளக்குகள், உட்புற அலங்காரம், முகப்பு விளக்கு வடிவமைப்பு, டிவி, பேன் வெண்டிலேட்டர், பின்புற புகை போக்கி என அசத்தலாக காரில் உள்ள அத்தனை அம்சங்களையும் ஆட்டோவில் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு செய்துள்ளார்.

இந்த மொத்த மாற்றத்திற்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடித்ததாகவும் தற்போது இந்த வாகனத்தை இயக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

குழந்தைகள் விரும்பியதால் இந்த வாகனத்திற்கு அமால் டுமால் ஆட்டோ என்ற பெயரும் வைத்துள்ளார்.

அதோடு, இந்த வாகனத்தில் வெளியே செல்லும் போது வியப்புடன் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்