'பங்காளி கல்யாணத்துக்கு வரல, மொய் வைக்க முடியலன்னு சொல்ல முடியாது டோய்'... 'வீட்டிலிருந்தே வாழ்த்தலாம்'... அசத்தல் திருமண அழைப்பிதழ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவல் காரணமாகத் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த தொழிலாளி உருவாக்கியுள்ள திருமண அழைப்பிதழ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'பங்காளி கல்யாணத்துக்கு வரல, மொய் வைக்க முடியலன்னு சொல்ல முடியாது டோய்'... 'வீட்டிலிருந்தே வாழ்த்தலாம்'... அசத்தல் திருமண அழைப்பிதழ்!

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திருமண விழாக்கள்,  பிறந்தநாள், காது குத்து என குடும்பங்கள் ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழாக்கள் கூட தடைப்பட்டுள்ளது.

திருமணத்தில் கூட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பதால், குடும்பமாகக் கலந்து கொள்வது மற்றும் முறை செய்வது என அழைக்கப்படும் மொய்ப் பணம் வைப்பதும் தடைப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சமூக இடைவேளைக்கு உகந்த திருமண அழைப்பிதழைத் திருப்பத்தூரைச் சேர்ந்த தொழிலாளி வடமலை சங்கர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

அந்த அழைப்பிதழில் கவரில் முன் பக்கம் ‘கியூ ஆர் கோடு’ அச்சிடப்பட்டுள்ளது. அதனை நாம் ஸ்கேன் செய்யும்போது, உள்ள யூ டியூப் மூலம் திருமணம் நடத்தும் மணமக்களின் பெற்றோர் அல்லது மணமக்கள் தங்களது திருமணம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை வைத்து, நேரடியாகப் பேசும் வீடியோ வருகிறது.

அதோடு திருமணம் அல்லது மற்ற சுப நிகழ்ச்சிகள் முடிந்து அரைமணி நேரத்தில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் நிகழ்ச்சிகளின் பதிவுகளைக் கூட நாம் காண முடியும். மேலும் மொய்ப் பணம் செலுத்த விருப்பப்படுவோர், அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள மணமக்களின் வங்கிக் கணக்கில் கூகுள் பே, போன் பே மூலம் மொய்ப் பணத்தைச் செலுத்த முடியும்.

மற்ற செய்திகள்