'கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ்'... 'கொரோனா இல்லாத இடமாக மாறிய மாவட்டம்'... உற்சாகத்தில் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, தற்போது பல பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது.

'கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ்'... 'கொரோனா இல்லாத இடமாக மாறிய மாவட்டம்'... உற்சாகத்தில் மக்கள்!

முன்னதாக, இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்றைய சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி, புதிதாக 508 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதிலிருந்து, 523 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

சுமார் 29 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு 20 க்கும் கீழ் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ள நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா தொற்றில்லாத மாவட்டமாக மாறியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்திலும் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்