‘இயேசுநாதர்’ சிலையில் இருந்து வடிந்த ‘நீர்’.. தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. நெல்லை அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கூடங்குளம் அருகே இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘இயேசுநாதர்’ சிலையில் இருந்து வடிந்த ‘நீர்’.. தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. நெல்லை அருகே பரபரப்பு..!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் சிலுவை நாதர் சிலை உள்ளது. வரும் 9ம் தேதி வரை கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தினமும் தேவாலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று சிலுவை நாதர் சிலையில் உள்ள கால் விரல்களில் இருந்து நீர் வடிந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த மக்கள், அந்த நீரை குடித்தும், உடலில் பூசியும் வழிபட்டனர். தொடர்ந்து இன்றும் நீர் வடிந்ததால் சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக தேவாலயத்துக்கு வந்து சிலுவை நாதரை வழிபட்டு செல்கின்றனர். இயேசு சிலையில் இருந்து நீர் வடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TIRUNELVELI, KUDANKULAM, JESUS, CHURCH