‘ஹாஸ்பிட்டலில் ரத்த டெஸ்ட்’ ‘மாத்திரை சாப்பிட்டும் சரியாகல’ தீபாவளிக்கு ஊருக்கு போன பெண் இன்ஜினீயருக்கு நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெங்கு காய்ச்சலால் நெல்லையை சேர்ந்த பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வ பாரதி. இவர் சென்னையில் உள்ள தனியார் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனால் செல்வ பாரதி மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனாலும் காய்ச்சல் சரியாகாமல் இருந்துள்ளது.
இதனால் அவரை அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் டெங்கு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் செல்வ பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தெரிவித்த மருத்துவர்கள், செல்வ பாரதிக்கு காய்ச்சல் வந்ததும் தானாகவே மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. முதலிலேயே சிகிச்சை எடுக்காததால் டெங்கு பாதிப்பு மூன்றாவது கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் அவரின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மூளை வரை சென்றதால் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் மழை காலங்களில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்புக் கசாயம் அருந்துவது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.