'மொட்ட மாடியில நல்ல உறக்கம்...' 'மழை பெய்தனால ஓடி வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ...' 'கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, இப்படி நடக்கும்ன்னு...' - அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லை மாவட்டத்தில் வீட்டின் உரிமையாளர் மாடியில தூங்கிக்கொண்டிருக்கும் போதே வீடு புகுந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மொட்ட மாடியில நல்ல உறக்கம்...' 'மழை பெய்தனால ஓடி வீட்டுக்குள்ள நுழைஞ்சப்போ...' 'கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, இப்படி நடக்கும்ன்னு...' - அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பம்...!

நெல்லை மாவட்டம் பேட்டைப் பகுதியில் வசித்து வருபவர்  45 வயதான செல்வராஜ். நெடுஞ்சாலை துறையில் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவி உட்பட 3 மகள்கள் உள்ளனர். செல்வராஜ் தினமும் இரவு தன் குடும்பத்துடன் மொட்டை மாடியில் தூங்கும் வழக்கத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் செல்வராஜின் இந்த வழக்கத்தை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரின் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஏதும் அறியாத செல்வராஜ் குடும்பத்தினர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குளிர்ந்த காற்று வீசியதாலும், மழைக்கான அறிகுறி தென்பட்டதாலும் மாடியிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பீரோவிலிருந்து 25 பவுன் நகை, ரூ.1200-யும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்களை மர்மநபர்கள் கொன்றுள்ளனர். இதனால் மனம் வெறுத்துப்போன செல்வராஜ், தற்போது நாய் வளர்ப்பதை நிறுத்திவிட்டதால், மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்