'அச்சோ, அவருக்கா இந்த நிலமை'... 'பெரியவர உடனே வர சொல்லுங்க'... 'ஆர்டரை கையில் கொடுத்த கலெக்டர்'... கண்கலங்கி நெகிழ்ந்து போன பரியேறும் பெருமாள் தங்கராசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஏழ்மையில் வாடிய பரியேறும் பெருமாள் புகழ் தங்கராசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்துள்ள உதவி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

'அச்சோ, அவருக்கா இந்த நிலமை'... 'பெரியவர உடனே வர சொல்லுங்க'... 'ஆர்டரை கையில் கொடுத்த கலெக்டர்'... கண்கலங்கி நெகிழ்ந்து போன பரியேறும் பெருமாள் தங்கராசு!

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர் ஹீரோவாக நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அமைந்த இந்த திரைப்படத்தின் தாக்கம் பலரையும் சென்றடைந்தது. இந்த திரைப்படத்தில் கதிருக்கு அப்பாவாக நடித்த நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்ததோடு, நாட்டுப்புற கலைஞர்கள் படும் வேதனையையும் நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

இதனிடையே நெல்லையில் வசித்து வரும் தங்கராசு, சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அவரின் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. தனது மனைவி பேச்சுகனியுடன் பழுதடைந்த வீட்டில் வசித்து வரும் தங்கராசு, கதவு இல்லாத வீட்டில் மகளை எப்படித் தங்க வைப்பது எனத் திருச்செந்தூரிலுள்ள உறவினர் வீட்டில்  மகளை அவர் தங்க வைத்துள்ளார். கடுமையான ஏழ்மை நிலையிலும் மகளை ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்ததோடு, தற்போது எம்.ஏ அஞ்சல் வழியிலும் மகளைப் படிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் தங்கராசுவின் ஏழ்மை நிலை குறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. உடனே தங்கராசுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய உத்தரவிட அவர், தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசுவின் வீட்டை ஆய்வு செய்தார். அதோடு தங்கராசு அவர்களின் பழுதான வீட்டைச் சரிசெய்வதோடு, அவரின் மகளுக்கும் தனியார்ப் பள்ளியில் வேலை வாங்கி தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது அதைச் செய்தும் காட்டியுள்ளார் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு.

நாட்டுப்புற கலைஞர் தங்கராசுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒன்றை ஒதுக்கியுள்ள மாவட்ட ஆட்சியர், அவரின் மகளுக்குத் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை ஒன்றையும் வழங்கியுள்ளார். தக்க நேரத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எடுத்த நடவடிக்கை நாட்டுப்புற கலைஞர் தங்கராசுவின் குடும்பத்தினரைக் கண்கலங்கச் செய்தது. துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுத்த ஆட்சியரைப் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்