'இனி இந்த பைகளில் தான்'... ‘பக்தர்களுக்கு லட்டு'... 'திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காக, லட்டு வழங்கும் பைகளை மாற்ற திருப்பதி தேவஸ்தானம் அதிடி முடிவு எடுத்துள்ளது.

'இனி இந்த பைகளில் தான்'... ‘பக்தர்களுக்கு லட்டு'... 'திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு'!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த லட்டு பிரசாதத்தை வழங்க, 2 ரூபாய்க்கு பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டன. இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நடவடிக்கை எடுத்துவருகின்றது.

ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு சராசரியாக மூன்றரை லட்சம் முதல், 4 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு சுமார் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுப்பதற்காக, 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யும் வகையில், அலுமினியம் ஃபாயில் உடன் கூடிய சணல் மற்றும் பேப்பர் பைகளில், இனி லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதற்காக திருப்பதி தேவஸ்தானம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் ஜூட் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LADDUS, TIRUPATI