'டிக்டாக் அன்பர்களே'... 'பெத்த மகளை வச்சுக்கிட்டு இப்படிப் பேசலாமா'?... 'கோட்டை வரை பறந்த புகார்'... ஜி.பி.முத்துவுக்கு நேர்ந்த கதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளைக் கட்டாயப்படுத்தி வீடியோ வீடியோ எடுத்ததோடு, குறிப்பிட்ட சாதிப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியது தொடர்பாக ஜி.பி.முத்து காவல்துறையிடம் சிக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து. மரக்கடையில் வேலை செய்து வரும் இவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலம். அதில் அதீதமாக மூழ்கிய காரணத்தால், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு மனைவி குழந்தைகள், இவரை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாக அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அதில் தனது மகளைக் கட்டாயப்படுத்தி, வீடியோ எடுத்ததோடு, குறிப்பிட்ட சாதிப் பெண்களின் முகபாவனையை இழிவுபடுத்தும் விதமாகப் பேசி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வீடியோ வைரலானதையடுத்து, மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த வினோ என்பவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு டிக்டாக்கர் ஜி.பி.முத்து மீது புகார் தெரிவித்து மனு அனுப்பி இருந்தார். அதன்பேரில் நேற்று காலையில் குலசேகரப்பட்டினம் போலீசார் உடன்குடியில் மரக்கடையில் அமர்ந்து டிக்டாக் செய்து கொண்டிருந்த ஜி.பி.முத்துவை, பிடித்துக் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அவரது செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள். அதில், தான் குறிப்பிட்ட சாதி குறித்து உள் நோக்கம் எதுவுமின்றி, யதார்த்தமாகத் தான் பேசியதாகத் தெரிவித்தார். மேலும் நான் குழந்தைகளை வைத்து டிக் டாக் வெளியிடமாட்டேன் எனக் கூறிய முத்து, எந்த வீடியோவையும் டிக்டாக்கில் பதிவேற்றம் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார்.
காலையிலிருந்து மாலை வரை காவல்நிலையத்தில் இருந்த ஜி.பி.முத்துவிற்கு காவல்துறையினர் அறிவுரைகளை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து ஜி.பி.முத்துவின் குடும்ப சூழ்நிலை கருதி அவரை எச்சரித்து, காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்