‘மஞ்சள் பைக்கில் வந்த 3 பேர்’.. தனியாக சைக்கிளில் சென்ற இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி.. அடுத்த சில மணிநேரத்திலேயே போலீசார் காட்டிய அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தனியாக சைக்கிளில் சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த மூன்று பேர் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி சாலையில் சூர்யா (22) என்ற இளம்பெண் நேற்று பிற்பகல் தனியாக சைக்கிளில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது பைக்கிள் வந்த மூன்று பேர் சூர்யாவின் பையை கண்இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த சமயத்தில் கண்ணனி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் மதுவிலக்குப் பிரிவு காவலர் யாசர் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த சிவா ஆகியோர் அந்த வழியாக சென்றுள்ளனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்களின் கையில் ஆரஞ்ச் நிற பேக் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்தபோது அந்த பேக்கை வழிப்பறி செய்தது தெரியவந்துள்ளது. உடனே அந்த மூன்று இளைஞர்களையும் தரமணி காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது மூவரும் கண்ணகி நகரை சேர்ந்த பத்ரி (19), விக்கி (19) மற்றும் ராஜி (19) என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்த பை, மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்