“உங்க வீட்டுல புதையல் இருக்கு”.. வசமாக சிக்கிய 3 போலி மந்திரவாதிகள்.. செல்போனை பார்த்து மிரண்டு போன போலீசார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டில் புதையல் எடுப்பதாக கூறி போலி மந்திரவாதிகள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | VIDEO: ‘அய்யோ.. என்னா அடி’.. இளம் தமிழக வீரர் மீது பலமாக மோதி கீழே விழுந்த கோலி..!
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பேதிரியன் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இருவரும் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இவரது மூத்த மகன் சிவகுமார் உயிரிழந்தார். அதன்பின் அவரது குடும்பத்தில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டதால் முத்துலட்சுமி மன விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் அவரது வீட்டிற்கு குறி பார்ப்பது போல் மணி என்பவர் வந்துள்ளார். அப்போது, ‘உங்கள் வீட்டிற்குள் புதையல் இருக்கிறது. அதை எடுக்க ரூ.7500 செலவு ஆகும். அந்த புதையலை எடுத்து விட்டால் உங்களது குடும்பப் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து வசதியாக வாழலாம்’ என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பிய முத்துலட்சுமியும், அவரது இளைய மகன் சுதாகரும் கடன் வாங்கி புதையல் எடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஒருநாள் இரவு மணி மற்றும் அவரது கூட்டாளிகளான அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராசு ஆகிய மூவரும் முத்துலட்சுமி வீட்டின் பின்புறம் புதையல் எடுப்பதாக கூறி 5 அடி பள்ளம் தோண்டியுள்ளனர்.
அதன்பின், அவர்கள் பித்தளையில் வாங்கி வந்த நாக சிலை, அம்மன் சிலை, காமாட்சி அம்மன் சிலை, காளி சிலை மற்றும் செம்பு நாணயங்கள், பித்தளை தகடு உள்ளிட்ட பூஜை பொருட்களை முத்துலட்சுமிக்கு தெரியாமல் அந்த குழிக்குள் புதைத்துள்ளனர். இதனை அடுத்து முத்துலட்சுமி வந்த பின், புதையல் கிடைத்து விட்டதாகவும், இதை ஒரு மாத காலத்திற்கு மாட்டு சாணம் மற்றும் களிமண்ணிற்குள் மூடி வைக்க வேண்டும் என கூறிவிட்டு ரூ.7500 பணத்தையும் பெற்று சென்றுள்ளனர்.
ஒரு மாதம் கழித்து அந்த சிலைகளை முத்துலட்சுமி சோதித்து பார்த்தபோது, அவை அத்தனையும் பித்தளை சிலைகள் என்பதும் வந்த 3 பேரும் போலி மந்திரவாதிகள் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து இதுகுறித்து மண்டையூர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட மணி, முருகேசன், ராசு ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 23 போலி பித்தளை சிலைகள், பூஜை செய்யும் மை உள்ளிட்ட பொருட்கள் 81 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், போலி மந்திரவாதிகளின் செல்போன்களை வாங்கி பார்த்தபோது, பல மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வீடியோக்களை அவர்கள் மூவரும் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வீடியோக்களின் அடிப்படையில் வேறு எங்கெல்லாம் இவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்