உணவு 'ஆர்டர்' செய்த நபர் ...'இலையைப் போட்ட 'சர்வர்'.. இறுதியில் சர்வருக்கு நேர்ந்த வேதனை சம்பவம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை உணவு விடுதி ஒன்றில் கடன் பாக்கி காரணமாக தனக்கு போடப்பட்ட இலையை எடுத்ததன் பெயரில் சர்வரை தாக்கிய ராமர் மற்றும் அவரது இரு மகன்களையும் போலீசார் கைது செய்தனர்.

உணவு 'ஆர்டர்' செய்த நபர் ...'இலையைப் போட்ட 'சர்வர்'.. இறுதியில் சர்வருக்கு நேர்ந்த வேதனை சம்பவம்

மதுரை உத்தங்குடி பகுதியில் இயங்கி வரும் உணவு விடுதி ஒன்றில் நாகராஜ் என்பவர் சர்வராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அங்கு வந்த ராமர் என்பவர் சிக்கன் 65 வேண்டுமென நாகராஜிடம் ஆர்டர் செய்துள்ளார். இலையை போட்டு விட்டு வந்த சர்வர் நாகராஜிடம் அந்த விடுதியின் உரிமையாளர் ராஜா, ராமர் ஏற்கனவே கடன் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனால் ராமருக்கு உணவளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

உரிமையாளரின் பேச்சைக் கேட்டு ராமருக்கு போட்ட இலையை நாகராஜ் எடுத்த நிலையில் ஆத்திரமடைந்த ராமர், சர்வர் நாகராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமரின் இரு மகன்களும் சர்வர் நாகராஜுடன் மோதலில் ஈடுபட்டு அங்கிருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து நாகராஜின் தலையில் தாக்கியுள்ளனர்.

இதனால் தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் தவித்த நாகராஜை மீட்டு  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். நாகராஜ் புகாரளித்ததன் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமர் மற்றும் அவரது இரு மகன்களையும் கைது செய்தனர்.

WAITER, TAMILNADU, MADURAI