‘பயங்கர சத்தம்’!.. திடீரென திரண்ட ஆயிரக்கணக்கான ராட்சத ‘வௌவால்கள்’.. பீதியில் உறைந்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் அருகே திடீரென ஆயிரக்கணக்கான வௌவால்கள் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் பாலைவன வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி பகுதிகளில் இந்த வகையான வெட்டுக்கிளிகள் அதிகளவில் தென்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி பகுதியில் இருந்த புளியமரம் மற்றும் அரச மரத்தில் 1000-க்கும் அதிகமான ராட்சத வௌவால்கள் திடீரென திரண்டு பயங்கர சத்தத்துடன் பறந்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உடனே இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் இந்த பகுதிக்கு இவ்வளவு வௌவால்கள் எப்படி வந்தது என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த வௌவால்களால் விவசாயத்துக்கும், மனிதர்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சமயத்தில் இதுபோன்ற ராட்சத வௌவால்களில் படையெடுப்பு அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. மேலும் இந்த வௌவால்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்