"போன மாசமே வந்துட்டனே!".. கோயம்பேட்டில் லாரி ஏறி ஊருக்கு போன இளம் பெண்ணுக்கு கொரோனா!.. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் 82 பேர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டத்தைப் போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பலரும் வீடு திரும்பியதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாற ஆரம்பித்தது.
ஆனால் சென்னை மேடவாக்கத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குட்பட்ட ஆதனூருக்கு செல்ல முனைந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி மாலையில் கோவில்பட்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிய லாரியில் ஏறி அப்பெண், அதிகாலையில் எட்டயபுரத்தில் இறங்கி சகோதரியின் உதவியுடன் ஆதனூருக்கு சென்றுள்ளார்.
அதன் சகஜமாக அக்கம் பக்கத்தினருடன் புழங்கியுள்ளார். அப்பெண் சென்னையில் இருந்தது பற்றி ஊரார் கேட்டபோது, தான் ஒரு மாதத்துக்கு முன்பே கோவில்பட்டிக்கு வந்து தங்கி இருந்ததாக அப்பெண் கூறியுள்ளார். அவ்வூரைச் சேர்ந்த இன்னொரு பெண் இதுபற்றி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் வந்து பரிசோதித்தபோது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை அடுத்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏறவும் அப்பெண் மறுத்துள்ளார். ஆனால் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கைது செய்யப்படும் என்று கூறியதால் வேறி வழியின்றி அப்பெண் ஆம்புலன்ஸில் ஏறி சிகிச்சைக்காக சென்றார். ஆனால் அதற்குள் அப்பெண் தொட்டு தூக்கி விளையாடிய 8 மாத குழந்தை உட்பட 82 பேரிடம் அவர் பழகியதால், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தான் கோயம்பேட்டில் இருந்த லாரியில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாகவும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் தனக்கு தெரியாது என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்த லாரி ஓட்டுநரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல், கோயம்பேட்டில் இருந்து மற்றொரு லாரி மூலம் தூத்துக்குடி சென்ற இன்னொரு ஆண் நபருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.