”வட இந்தியர்கள்தான் பெனிஃபிட்.. தமிழ் தொழிலாளர்களிடம் இருக்குற பிரச்சனையே இதான்” - டெக்ஸ்டைல் முதலாளி சொல்வது என்ன? பரபரப்பு பின்னணி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில தினங்களாகவே வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர், தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதன் பெயரில், தமிழர்களுக்கு வேலை இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுவதாக ஒரு பெரிய கருத்து நிலவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இதன் காரணமாக, வடமாநில தொழிலாளர்கள் பற்றிய விமர்சனங்களும் பெரிய அளவில் இருந்து வரும் சூழலில், வட மாநில இளைஞர்கள் தமிழகத்திற்கு வருவது தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை குறைப்பதாக பெரிய கேள்வியே எழுந்திருந்தது.
இந்த நிலையில் திருப்பூர் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி உரிமையாளர் மனோஜ் பாலு என்பவர், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரிவது பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
"தங்குற இடம், சம்பளம், சாப்பாடு இந்த மூணு விஷயம் தான் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர்ல இருக்க முக்கிய காரணம். வட இந்தியால இருக்குறவங்க சப்பாத்தி சாப்பிடுவாங்க. அவங்களுக்கு ஒரு மூட்டை உருளைக்கிழங்கு எடுத்தா போதும். ஆனா தமிழ்நாட்டுல உள்ளவங்களுக்கு குறைஞ்சது மினி மீல்ஸாது வேணும். அதே மாதிரி, தமிழ்நாட்டுல இருக்கிறவங்க இங்க வந்து தங்குனாங்கன்னா ஒரு ரூமுக்கு நாலு பேர், மூணு பேருக்கு மேல தங்க மாட்டாங்க. ஆனா நார்த் இந்தியன்ஸ் அப்படி இல்ல ஒரு ரூம்ல 10 பேர் இருந்தாலும் தங்குறதுக்கு ரெடியா இருக்காங்க. ஜஸ்ட் அவங்க தூங்கணும், தூங்கி எந்திரிச்சு போனும்ன்னு தான் ரெடியா இருப்பாங்க.
அவங்க ஊரை கம்பேர் பண்ணும் போது நம்ம ஊர்ல அவுங்களுக்கு நிறைய சம்பளம். ஆனா தமிழ்நாடுல இருக்கிறவங்களுக்கு நம்ம கொடுக்க வேண்டிய சம்பளம் அதிகமா இருக்கு. அவங்களுக்கு கம்மியான சம்பளம் கொடுத்தாலே போதும், 12 மணி நேரம் வேலை பண்றதுக்கு ரெடியா இருக்காங்க. அப்படி இருக்குறப்ப நாங்க வடமாநில தொழிலாளர்களை எல்லாரும் வேலைக்கு சேர்க்க ரெடியா இருக்கோம். ஒரு மாசம் Train பண்ணா போதும் அவங்க கத்துக்குவாங்க.
அதே மாதிரி திங்கட்கிழமைங்குறது, திருப்பூர்ல குட்டி ஞாயிற்றுக்கிழமை மாதிரி. தமிழ்நாட்டில் இருக்கிற யாருமே வேலைக்கு வர மாட்டாங்க. சனிக்கிழமை சம்பளம் வாங்கிட்டாங்கன்னா அப்புறமா ஞாயிறு, திங்கள் கட்டாயம் அவங்களுக்கு லீவு தான். ஒருத்தரை வந்து புடிச்சி உட்கார வைக்குறது ரொம்ப சிரமமா இருக்கு. ஆனா இந்த பிரச்சனை வடமாநில தொழிலாளர்கள் கிட்ட இருக்காது. வருஷத்துல ஒரு மாசம் லீவு வரும். தீபாவளி வரும் போது ஒரு மாசம் ஊருக்கு போயிட்டு வருவாங்க.
தமிழ்நாட்டில் இருக்கிறவங்களை வேலைக்கு வைக்குறதுக்கும், வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு வைக்குறதுக்கும் எங்களுக்கு மொத்தமா 40 சதவீதம் வரைக்கும் லாபம் இருக்கு" என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்