“போலீஸ்க்கு போனா இழுத்தடிப்பாங்க!”.. “மகன் போட்ட மாஸ்டர் ப்ளான்!”.. “தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் கொண்டாலப்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் கோலப்பொடி தயாரிக்கும் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் பழனிசாமி(62). இவரது மனைவி கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு பூபதி என்கிற மகனும்,  வசந்தா என்ற மகளும் உள்ளனர்.

“போலீஸ்க்கு போனா இழுத்தடிப்பாங்க!”.. “மகன் போட்ட மாஸ்டர் ப்ளான்!”.. “தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!”

இதில் பூபதி கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக மோகனப்பிரியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் காதல் திருமணத்தை, பூபதியின் தந்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தன் மனைவியுடன் தனது தந்தை இருக்கும் அதே வீட்டில்யே வாழந்து வந்த பூபதிக்கும், அவரது தந்தை பழனிசாமிக்கும் இடையே சொத்துப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.

அதன் பிறகு அதே பகுதியில் தனது மனைவியுடன் வேறொரு வீட்டினை வாடகைக்கு எடுத்து பூபதி தங்கி வந்தார். இந்நிலையில் தனது தந்தை இருக்கும் வீட்டுக்குச் சென்ற பூபதி, தந்தை கழுத்தறுத்து கிடந்ததாகக் கூறி அலறித்துடித்துள்ளார். இதனைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாரிடத்தில் புகார் கொடுக்கலாம் என்று யோசனை கூறியுள்ளனர்.

ஆனால்,  ‘போலீஸுக்கு தகவல் கொடுத்தால் விசாரணை அது இது என இழுத்தடிப்பார்கள்’ என்றும்,  ‘பேசாமல் தந்தையின் சடலத்தை முறைப்படி எரித்துவிடலாம்’ என்றும் கூறிய பூபதி மீது சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், இதனை முன்வந்து விசாரித்த போலீஸிடம் வசமாக சிக்கிய பூபதி, தான் தான் தனது தந்தையிடன் சென்று குடிபோதையில் சொத்தைக் கேட்டு தகராறு செய்ததாகவும், அவர் தூங்கும்போது கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு நாடகமாடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

SALEM