'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 6-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் போக்குவரத்து தொடர்பான சில விளக்கங்கள் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் பிறகு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சென்னைக்குள்' இ-பாஸ் தேவையா? 'திங்கள்' கிழமையில் இருந்து 'சென்னை இப்படிதான்' இருக்கும்! வெளியான 'அறிவிப்பு'!

அதன்படி சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்ஸி முதலானவை திங்கள்கிழமை முதல் இயங்கலாம் என்றும் சென்னை மண்டலம் உள்ளே இயங்குவதற்கு இ பாஸ் எதுவும் தேவையில்லை என்றும் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் திங்கள்கிழமை முதல் சிக்னல்கள் இயங்கும் என்று தெரிவித்த அவர் போலி இ-பாஸ் பற்றி தகவல் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக ஜூலை 6-ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் அதேசமயம் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதேபோல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சலுக்கு மட்டுமான அனுமதியுடன் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார். காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்