‘லவ் பண்ணிருக்கோம்ல...’ எப்படி விட முடியும்...? ‘ஒரே காதல் குழப்பம்...’ ‘அடுத்தடுத்து மாறிய முடிவுகள்...’ – கடைசில் திடீர் திருப்பம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் ராம்பிரியா (20). இவர்களது வீட்டின் அருகே தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ்(29). என்ஜினீயரிங் முடித்துள்ள விக்னேஷ் தற்போது பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
அருகே வசிப்பதால் விக்னேஷும், ராம்பிரியாவும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விக்னேஷ் வீட்டில் தெரியவர கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராம்பிரியா தனது தந்தையிடம் கூறி தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ராம்பிரியாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த நிலையில், வருகிற நவம்பர் 25-ந் தேதி ராம்பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ், ராம்பிரியா வீட்டுக்கு சென்று தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தன்னை விட்டு வேறு வாலிபரை திருமணம் செய்தால் நாம் இருவரும் சேர்ந்து உள்ள போட்டோக்களை உனது வருங்கால கணவரிடம் காட்டிவிடுவேன் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு ராம்பிரியா, விக்னேஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த நேரம் விக்னேஷ் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து வேறு ஊருக்கு சென்று விட்டனர். இதனால் ராம்பிரியா திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் வீட்டின் முன்பு ராம்பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் தன்னை விக்னேஷ் திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்குப்பின் விக்னேஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராம்பிரியாவை திருமணம் செய்து கொள்ள விக்னேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து அவர்கள் இருவருக்கும் போலீசார் திருமணம் செய்து வைத்தனர்.
மற்ற செய்திகள்