‘காரில்’ ஏற்றியதைப் பார்த்து ‘அதிர்ச்சியடைந்த’ உறவினர்கள்... வழிமறித்து ‘அடித்து’ உடைத்ததால் ‘பரபரப்பு’... ‘காதல்’ கணவர் செய்த ‘கொடூரம்’...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூரில் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவரும் 6 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், செங்குட்டுவன் மனைவி சத்யாவிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கணவன், மனைவி இருவருக்கும் இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாற, ஆத்திரத்தில் செங்குட்டுவன் சத்யாவை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சத்யாவின் உடலை காரில் ஏற்றுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய உறவினர்கள் காரை வழிமறித்து அடித்து உடைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து செங்குட்டுவன் அங்கிருந்து தப்பிச் செல்ல, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செங்குட்டுவனை தேடிவரும் போலீசார் இது கொலையா, அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.