'டாஸ்மாக் கொள்ளையடிச்சு ஃப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி...' 'ஸ்கூல்ல வேற லேப்டாப் திருட்டு போயிருக்கு...' '2-க்கும் இருந்த ஸ்பெஷல் கனெக்ட்...' - போலீசாரின் சாதுர்யம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் இருந்து மதுபானப்பாட்டில்களை திருடிய 4 இளைஞர்கள், அவரது நண்பர்களுக்கு விருந்து வைத்து போலீசாரிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே கதாப்பு சதரு கிராமத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையில் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் திருட்டுக் குறித்து வடுவூர் காவல் நிவையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இதேபோல், வடுவூர் பகுதியில் இருக்கும் எடகமலையூர் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 மடிக்கணிணிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை குறித்தும் பள்ளியின் தலைமையாசிரியர் நடுஞ்செழியன் வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமீபகாலமாக நடைபெற்ற தொடர் திருட்டுக்களை செய்யும் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (20.09.2020) அன்று, எடகமலையூர் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பெயரில் இரண்டு வாலிபர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் எடகமலையூர் பகுதியைச் சேர்ந்த சஜேன் (22), கதவன் (20) என தெரியவந்துள்ளது.
மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில், சஜேன் மற்றும் கதவன் ஆகியோர் தான் டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்களை கொள்ளையடித்ததுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தன் நண்பர்களுக்கு மது விருந்து வைக்கத்தான் டாஸ்மாக் கடையில் இருந்து பிராந்தி, பீர், விஸ்கி பாட்டில்களை திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் எடகமலையூர் அரசுப்பள்ளியில் மாணவர்களின் மடிக்கணினியை திருடியதும் இவர்கள் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களோடு ஹரிஹரன், தினேஷ் ஆகியோரும் கூட்டு சேர்ந்து கொள்ளையடித்ததும் தெரிந்ததையடுத்து, அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மடிக்கணிணி மற்றும் மோட்டார் சைக்கிள் முதலியன அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டதுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்