தமிழகத்தில் முதன்முறையாக 'இறைவனின் சமையலறை'!.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!.. தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுமா?.. மக்கள் ஆவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் ஒவ்வோரு திங்கள் கிழமையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெறும். குறை தீர்ப்பு கூட்டத்துக்கு வரும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'இறைவனின் சமயலறை' என்ற பெயரில் உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக 'இறைவனின் சமையலறை'!.. மாவட்ட ஆட்சியர் அதிரடி!.. தமிழகம் முழுவதும் பின்பற்றப்படுமா?.. மக்கள் ஆவல்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருக்கும் கந்தசாமி மக்கள் பணியில் மிகுந்த அக்கறையுடனும் சிரத்தையுடனும் செயல்படுபவர். மக்கள் கேட்கும் உதவி, உண்மை என்று தெரிந்தால் வீடு தேடிச் சென்று உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.thiruvannamalai district collector kandhasamy iraivanin samayalarai

அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குறைகள் தெரிவிக்க வரும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே புதிய உணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுக் கூடத்துக்கு இறைவனின் சமையலறை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 13 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சமலயலறையில் திங்கள்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இறைவனின் சமயலறை உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி திறந்து வைத்து பேசுகையில், "சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கூட மாவட்ட ஆட்சியரிடத்தில், மக்கள் மனு கொடுக்க வருகிறார்கள். அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கவும் நேரிடுகிறது. அப்படி, காத்திருக்கும் மக்கள் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த உணவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

பிறகு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வெஜிடபிள் சாதம், தயிர் சாதம், கேசரி, மிக்சர், ஊறுகாய் உள்ளிட்ட உணவுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தன் கையாலேயே வழங்கினார்.

thiruvannamalai district collector kandhasamy iraivanin samayalarai

தமிழகத்தில் இறைவனின் சமையல் கூடம் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு கூடம் அமைப்பது இதுவே முதன்முறை. திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியைப் பின்பற்றி பிற  மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இது போன்ற உணவுக் கூடத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்