முதல் அட்டெம்ப்ட் மிஸ் ஆயிடுச்சு!.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்!.. கணவன் சடலம் மீட்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆம்பூர் அருகே தாயுடன் சேர்ந்து திட்டமிட்டு கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதல் அட்டெம்ப்ட் மிஸ் ஆயிடுச்சு!.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்!.. கணவன் சடலம் மீட்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவர் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 10 வயது மகள் மற்றும் 6வயது மகன் உள்ளனர்.

                   

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ் பாபு மீண்டும் வீடு திரும்பவே இல்லை. இதையடுத்து, ரமேஷ் பாபுவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இருசக்கர வாகனத்தில் சடலம் ஒன்று ஏரி கால்வாய் பகுதியில் உள்ளதாக அங்குள்ள சிலர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் காவல்துறை விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ரமேஷ் பாபுவின் மாமியார் சரசா மற்றும் மனைவி ஜெயந்தி ஆகியோர் அவரது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினரை வைத்து ரமேஷ் பாபுவை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், ரமேஷ் பாபு தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஜெயந்தியை தாக்கியுள்ளார். இதுகுறித்து ஜெயந்தி அவரது தாய் சரசாவிடம் கூறியுள்ளார். இதனால், ஜெயந்தி மற்றும் சரசா இணைந்து தங்களது உறவினர்கள் மற்றும் கூலிப்படையினர் என 4 பேரின் உதவியோடு ரமேஷ் பாபுவை கொலை செய்ய முடிவு செய்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரமேஷ் பாபு மீது காரை மோத வைத்து விபத்து ஏற்படுத்தினர். ஆனால், ரமேஷ்பாபு லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி ஆலாங்குப்பம் பாலாறு அருகே உள்ள விவசாய நிலத்தில் இருந்த ரமேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற தனுஷ், கௌதமன், ராமன், விக்கி ஆகியோர் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மனைவி ஜெயந்தி மற்றும் மாமியார் சரசா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த இராமன், கௌதமன், விக்கி, தனுஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

மற்ற செய்திகள்