"தமிழர் மீது அக்கறையுள்ள விஜய்சேதுபதி இப்படத்தில் நடிப்பது ..!" - திருமா!.. "தமிழர் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டுகிறது" - வைகோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிரான கருத்துக்களை திரைப்பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் முன்மொழிந்து வருகின்றனர்.
அதன்படி இதுபற்றி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கட்டும். யார் வேண்டுமானாலும் அதில் நடிக்கட்டும். ஆனால் தமிழர் மீது அக்கறையுள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பது ஏற்க கூடியதாக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மதிமுக தலைவர் வைகோ பேசும்போது, “தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் முரளிதரனாக, தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் இரத்தத் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாகி கதறி அழுதபோது பரிகாசம் செய்த இனத் துரோகி முத்தையா முரளிதரனாக திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது. எனவே "800" திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் விஜய்சேதுபதி தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மற்ற செய்திகள்