'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊர்க்காவல் படையினர் எனக் கூறி லிஃப்ட் கேட்டு நூதன முறையில் இருச்சக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர், இன்று காலை தனது அம்மாவை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கிளினிக்கில் பணியின் காரணமாக இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

சென்னை காவல் துறை ஆணையரகம் அருகே இரண்டு நபர்கள் தாங்கள் ஹோம் கார்டு (Home guard) எனக் கூறி லிஃப்ட் கேட்டுள்ளனர். காவலர் உடையில் இருந்ததால் இருவரையும் ஏற்றிக் கொண்ட பிரகாஷ் வேப்பேரி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, காவல் நிலையம் எதிரே சென்றபோது போக்குவரத்து காவல்துறையினர் மூன்று பேர் ஒரே வண்டியில் வருவதை பார்த்து நிறுத்தியுள்ளனர்.

சற்று தூரத்தில் இறங்கிக் கொண்ட பிரகாஷ் காவலரிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஹோம் கார்டு என கூறிய இரண்டு நபர்களும் பிரகாஷின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றனர். அதன் பிறகு வந்தவர்கள் இருவரும் இருச்சக்கரவாகன திருடர்களாக இருக்கலாம் என போலீசார் கூற வேப்பேரி காவல்நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர்.