'சார் உங்களுக்கு ஒரு கொரியர் வந்திருக்கு...' 'உள்ள என்ன இருக்குன்னு பார்த்தா...' '15 நாளுக்கு முன்னால தொலைஞ்சு போன...' திருடர் செய்த வேற லெவல் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் சொந்த ஊருக்கு செல்ல வண்டியை திருடியவர், ஊருக்கு சென்றதும் நேர்மையாக பைக்கை கொரியர் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

கொரோனா அச்சம் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பலர் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ஒரு சிலர் இ-பாஸ் மூலமும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊர் செல்ல இளைஞர் ஒருவர் பைக்கை திருடி, பின்னர் நேர்மையாக பைக்கை பார்சல் செய்து கொரியர் அனுப்பியுள்ளார்.
கோவை பள்ளபாளையத்தில் லேத் தொழிற்சாலை நடத்தி வருபவர் சுரேஷ். கடந்த 15 நாட்களுக்கு முன் இவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போகியுள்ளது. திருட்டு குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பெயரில் சூலூர் காவல் நிலைய போலீசார் பைக் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பேக்கரியில் பணிபுரிபவர் ஒருவர் எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலிசார் தீவிரமாக விசாரணை நடந்து வருகின்றனர். ஆயினும் தன்னுடைய பைக் திரும்பி கிடைத்த சந்தோஷத்தில் சுரேஷ் உள்ளார்.
மற்ற செய்திகள்




