இந்த சம்பவம் நிறய நடந்திருக்கு.. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்.. திருடிய வீட்டின் உரிமையாளரிடமே தப்பிக்க லிஃப்ட் கேட்ட திருடர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஆவடியை அடுத்த வீரபுரம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவர் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் நிறய நடந்திருக்கு.. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்.. திருடிய வீட்டின் உரிமையாளரிடமே தப்பிக்க லிஃப்ட் கேட்ட திருடர்.!

Also Read | விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த முட்டை.. பலரையும் ஆச்சரியமூட்டும் ரிசல்ட்!!..

இவர் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் தங்க நகை உள்ளிட்ட பொருட்களை பட்டப் பகலில் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெகனிடம் ஒரு நபர் லிப்ட்டும் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பைக்கில் லிப்ட் கேட்ட அந்த நபரின் நடவடிக்கைகளால் அவர் மீது ஜெகனுக்கு சந்தேகம் எழவே, அந்த மர்ம நபரை பிடிக்கவும் முயன்றுள்ளார். அவரும் தப்பியோட முயல ஜெகனுக்கு விஷயம் இன்னும் ஊர்ஜிதமாகிவிட்டது.

Thief caught after stealing and asking lift in owner bike

உடனே, அப்பகுதி மக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்த போது, அவரிடம் ஜெகன் வீட்டில் திருடு போன நகைகள் மற்றும் 100 க்கு மேற்பட்ட சாவிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த திருடனை பிடித்த மக்கள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். திருடிய வீட்டின் உரிமையாளரிடமே லிப்ட் கேட்டு திருடன் சிக்கிய சம்பவம், அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | நடைப்பயிற்சியில் திடீரென மயங்கி விழுந்து மணக்குள விநாயகர் கோயில் யானை மரணம்.. கதறி அழுத பக்தர்கள்!

CHENNAI, THIEF, STEAL, LIFT, OWNER BIKE

மற்ற செய்திகள்