‘தீபாவளி தினத்தில்’... ‘நினைத்த நேரத்தில் எல்லாம் பட்டாசு வெடிக்க முடியாது’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உண்டு என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், காற்று மாசுபாடு குறித்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஆண்டில் பட்டாசு வெடிப்பதற்கென நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதைப்போலவே, இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு, கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். அதற்கான எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற நேரம் குறித்த கட்டுப்பாடு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தீபாவளியை ஒட்டி இந்த ஆண்டு, பல்வேறு புதிய பட்டாசு ரகங்கள் வந்திருந்தாலும், சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுவைக்காக, உணவில் சேர்க்கப்படும், அஜினமோட்டோவால், உடலுக்கு தீங்குகள் ஏற்படுத்தக்கூடியதாக கூறப்படுகின்றநிலையில், அதனை தமிழகத்தில் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.