'ரொம்ப நேரமா ஆளைக்காணோம்'.. முதலாளிக்கு பதட்டத்துடன் பேசிய பணியாளர்.. டிவிஸ்ட்டை உடைத்த சிசிடிவி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி அருகே சக தொழிலாளியை செய்துவிட்டு நாடகமாடிய நபரை காவல்துறை கைது செய்திருக்கிறது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போ அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவருடைய வயது 48. குரங்கணி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இவர் தோட்ட பராமரிப்பு மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய உறவினரும் அதே பகுதியைச் சேர்ந்த வருமான ஜெகதீஸ்வரன் என்பவரையும் தான் வேலை பார்த்துவந்த தோட்டத்தில் பணிபுரிய அழைத்து சென்றிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தோட்டத்தின் உரிமையாளர் ராம்குமார் முருகனுக்கு போன் கால் செய்துள்ளார். அப்போது முருகனின் போனை எடுத்த ஜெகதீசன் அவரை காணவில்லை என ராம்குமாரிடம் படபடப்புடன் தெரிவித்திருக்கிறார்.
காட்டிக்கொடுத்த சிசிடிவி
இதனையடுத்து தனது தோட்டத்திற்கு விரைந்து வந்த ராம்குமார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராயத் தொடங்கினார். அப்போது முருகன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை வர பார்த்திருக்கிறார். அதன்பிறகு முருகனை ஜெகதீசன் கடுமையாகத் தாக்கியதும் பின்னர் முருகனின் உடலை அருகில் இருந்த ஓடைக்கு இழுத்துச்சென்று மறைத்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து காவல்துறைக்கு ராம்குமார் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஓடையில் இருந்த முருகனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், ஜெகதீசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை
காவல் துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெகதீசன் இடம் போலீசார் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து இருக்கிறார். பணி புரியும் இடத்தில் தன்னைப் பற்றி அடிக்கடி முதலாளியிடம் முருகன் புகார் கூறி வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குள்ளும் மது அருந்தும் போது சண்டை ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக முருகனை கொலை செய்ததாகவும் ஜெகதீசன் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இறந்தவரின் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த குரங்கணி காவல்துறையினர் ஜெகதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுபோதையில் சக தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்