'சாக்கடையில் தங்க துகள்கள் வருமா...? '30 முதல் 40 பேர் வரை டெய்லி வெயிட் பண்ணுவோம்...' - அந்த பகுதி மக்களின் தற்போதைய சங்கடம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தினமும் சாக்கடைகளில் இருந்து தங்கதுகள்கள் எடுக்கும் பணிகளை செய்து வருவதாக கூறுகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.
பொதுவாக முந்தைய காலகட்டத்தில் தங்கமானது கைகளால் செய்யப்படும். அப்போது அதன் மீதி தங்க துகள்கள் உதிரும். இந்த துகள்களானது கழிவுநீரோடு கலந்து சாக்கடையில் வரும். அப்படிவரும் தங்க துகள்களை பொதுமக்கள் சிலர் இந்த சாக்கடை நீரை அள்ளி மணல் நிரம்பிய வடிக்கும் வட்டகையில் ஊற்றி நீரையும், கழிவுகளையும் பிரித்து, வடிக்கப்பட்ட மணல் துகள்களில் இருந்து தங்க துகள்களை பிரித்து எடுப்பார்கள்.
தேனியில் எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்களில் தங்கநகை பட்டறைகள் அதிகளவில் இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் தங்க நகைகள் பெரும்பாலும் அச்சில் வார்க்கப்படுவதால் தங்களுக்கு தங்கத்துகள்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது எனக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து கூறிய தங்க துகள் சேகரிப்பாளர்கள், 'சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்க நகைகளை கைளால் செய்தனர். அப்போது எங்களுக்கு நிறைய தங்க துகள்கள் சாக்கடை நீர் வழியாக வரும். எனவே தினமும் 30 முதல் 40 பேர் வரை துகள்களை சேகரித்தோம். இந்த துகள்களை தங்கநகை பட்டறைகளில் விற்று அன்று மாலையே பணத்தை கையில் வாங்கி விடுவோம்
ஆனால் இப்போது தினமும் 300 ரூபாய்க்கு தேவையான தங்கதுகள்கள் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அதுவும் பெரும்பாலும் தங்க நகைகள் அச்சில் வார்க்கப்படுகின்றன. சில தங்கநகை பட்டறைகளில் மட்டுமே தங்க நகைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. எங்களுக்கு போதிய வருமானமும் இல்லை' என தங்களின் ஆதங்கத்தைக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
மற்ற செய்திகள்