'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேனியில் முதலமைச்சர் கலந்துகொண்ட பிரச்சார கூட்டம் நிகழ்ந்தது. அப்போது வாகனங்களை வெகுவேகமாக நகரச் சொல்லி கண்காணித்துக்கொண்டிருந்த தேனி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், அவ்வழியே வாகனத்தில் பயணியராய் அமர்ந்து வந்த பெண்மணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்!

தேனி மக்களவைத் தொகுதி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக-அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின் போது தேனி நேரு சிலை அருகே கடுமையான போக்குவரத்து உண்டானது. இதனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தையும், வாகன நெரிசலையும் காவலர்கள் ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த டாடா மேஜிக் பயணிகள் வாகனத்தை நெருக்கடியில் இருந்து விடுவிக்கும் விதமாக, துரிதமாகச் செல்லச் சொல்லி  தேனி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் கூறினார். அப்போது வாகனத்தின் உள்ளிருந்த பயணியரான பெண்மணி ஒருவர், காவல் ஆய்வாளரின் கைச்சட்டையை பிடித்திழுத்து கையெடுத்து கும்பிடுகிறார். உடனே காவல் ஆய்வாளர் முருகேசன் அப்பெண்ணின் இந்த செயலுக்காக வேகமாக கன்னத்தில் அறைகிறார். இதனால் அந்த பெண்மணி தட்டென நிலைகுலைகிறார்.

இந்த சம்பவம் அங்கிருந்த கேமராக்களில் பதிவானதை அடுத்து வீடியோவாக இணையதளத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் பல வகையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதே சமயம் கும்பிடுவதற்கு முன்பாக அந்த பெண்மணி ஆய்வாளர் முருகேசனின் காக்கிச்சட்டையை பிடித்து இழுத்துள்ளார். அதனால் முருகேசனுக்கு ஆத்திரம் வந்துள்ளது என்பதும் வீடியோவில் தெரியவருகிறது. 

ELECTIONS, THENI, TNPOLICE, BIZARRE