கொரோனா தொற்று 'கண்டறிவதில்'... முதல் 2 இடங்களை பிடித்த... 'மாவட்டங்கள்' இதுதான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்றை கண்டறிவதில் முதல் 2 இடங்களை பிடித்த மாவட்டங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளுக்குநாள் கொரோனா அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் நாள்தோறும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தொற்றை கண்டறிவதில் முதல் 2 இடங்களை பிடித்த மாவட்டங்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி முதல் இடத்தை சென்னை மாவட்டமும், 2-வது இடத்தை தேனி மாவட்டமும் பிடித்துள்ளன.
தேனி மாவட்டத்தில் இன்று வரை மொத்தம் 16,954 மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக அளவில் மாதிரிகள் சேகரித்து பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 12,060 மாதிரிகள் என்ற விகிதம் அடிப்படையில் கொரோனா தொற்று கண்டறியும் நடவடிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே தேனி மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்