'குப்பை'க்கூடையை 'முகமூடி'யாக்கி.. 'திருச்சி'யில் மீண்டுமொரு கொள்ளை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த வாரம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் பொம்மை மாஸ்க் அணிந்து திருடர்கள் 13 கோடிக்கும் அதிகமான நகைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

'குப்பை'க்கூடையை 'முகமூடி'யாக்கி.. 'திருச்சி'யில் மீண்டுமொரு கொள்ளை!

இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி தாளக்குடி பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு 20-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பயிற்சி மையத்தின் கதவை உடைத்துக்கொண்டு திருடுவதற்காக 2 திருடர்கள் உள்ளே வந்துள்ளனர்.அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்த்ததும் அவர்கள் இருவரும் வெளியில் சென்றனர்.தொடர்ந்து வாசலில் இருந்த குப்பைக்கூடையை முகமூடியாக்கி மீண்டும் அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்துஅங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2500 பணத்தை மட்டும் திருடி சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பயிற்சி மையத்தின் நிர்வாகி சமயபுரம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

CCTV, TRICHY