'செல்போன் பேசியபடியே அசால்ட்டாக'... 'நோட்டமிட்ட இளைஞர் செய்த வேலையால்'... 'அதிர்ச்சியடைந்த கடை ஓனர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூரில் காவல்நிலையம் அருகே, நோட்டமிட்ட இளைஞர் ஒருவர், கடைக்கு முன்பு சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'செல்போன் பேசியபடியே அசால்ட்டாக'... 'நோட்டமிட்ட இளைஞர் செய்த வேலையால்'... 'அதிர்ச்சியடைந்த கடை ஓனர்'!

திருப்பூர் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்த மணிமாறன், தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் சிறிதுநேரம் கழித்து, வாகனத்தில் இருந்து சாவியை எடுக்க மறந்த அவர், திரும்பி சென்று பார்த்தபோது,  வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமாறன், தனது கடையில் இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை பார்த்தார்.

அதில், சாலையோரம் செல்போனில் பேசிய படி வந்த இளைஞர் ஒருவர், சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு திருடிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கடையின் அருகே திருப்பூர் வடக்கு காவல்நிலையம் செயல்பட்டு வரும் நிலையில்,  திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள திருப்பூர் வடக்கு போலீசார், அதில் பதிவான இளைஞனின் உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.

THEFT, CCTV, FOOTAGE