‘கொள்ளிடம் ஆற்றை கடக்கும்போது’... ‘திடீரென கவிழ்ந்த படகால் சோகம்’... ‘பதறிய கிராம மக்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்றபோது, படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘கொள்ளிடம் ஆற்றை கடக்கும்போது’... ‘திடீரென கவிழ்ந்த படகால் சோகம்’... ‘பதறிய கிராம மக்கள்’!

அரியலூர் மாவட்டம் தென்கரையில் உள்ளது கீழராமநல்லூர். இங்கிருந்து அக்கரையில் உள்ள மேலராமநல்லூர் கிராமத்திற்கு, படகில் 30 பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக கொள்ளிடம் ஆற்றின் நடுவே செல்லும் போது, படகு  கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த கிராம மக்கள் அலறினர். 30 பேரில் 10 பேர் மீட்கப்பட்டநிலையில், ஆற்றின் நடுவே இருந்த மணல் திட்டில் 10 பேர் தஞ்சம் அடைந்தனர். படகில் சென்று நீரில் மூழ்கிய மீதமுள்ள 10 பேரின் கதி என்ன ஆனது என தெரியாததால், முதலில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து அவர்களை தேடும் பணியில் கிராம மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக அதிக அளவில் நீர் செல்வதால், படகு நீரில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. மேலும், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் இடையே படகு போக்குவரத்தை நம்பியே, அந்தப் பகுதி மக்கள் உள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதற்கிடையே, மீதமுள்ள 10 பேரை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வந்த நிலையில், 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BOAT, CRASHES, ARIYALUR