‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்என்னதான் ஆன்லைனில் ஷாப்பிங் பண்ணினாலும், குடும்ப தலைவர்களுக்கு தீபாவளி அன்று காலை வரை, வேலை இருந்துக்கொண்டே இருக்கும். எனினும், நேர வரம்பு முறை உள்ளதால், நள்ளிரவு வரை கடைகள் திறந்து இருக்க அனுமதியில்லை.
இன்னும் ஒருவாரகாலமே தீபாவளி உள்ளநிலையில், பண்டிகை காலத்துக்காக இரவிலும் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதாக, மனுவில் கூறப்பட்டது. இந்த மனுவை நீதிபதி விசாரித்தார்.
அதில், தீபாவளிக்கு முந்தைய வெள்ளி (25), சனிக்கிழமைகளில் (26), அதிகாலை 2 மணி வரை மட்டும், கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை, முறையாக வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று கூறிய அவர், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இது வியாபாரிகளை மட்டுமில்லாது, பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.