Video: கைய விடுறான் சார்.. ஓடும் பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறிய மன்மத போலீஸ்.. புரட்டி எடுத்த மக்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணம்: அரசு பேருந்தில் மதுபோதையில் வந்த காவலர் சக பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது செயலை கண்டு கோபமடைந்த பெண் உடனடியாக தொலைபேசி மூலம் தனது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளார். பின்பு இது குறித்து அந்த பெண், நடத்துனரிடம் முறையிட்டார். கும்பகோணம் வரும் வரை மீண்டும் மீண்டும் அந்த நபர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார்.
நான் யார் தெரியுமா?
பின்பு நடத்துனரிடம் பாதிக்கப்பட்ட பெண் முறையிட்ட போது, மதுபோதையில் இருந்த அந்த நபரிடம் மற்ற பயணிகள் சத்தம் போட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தி அந்த நபரை கீழே இறங்குமாறு நடத்துனர் கூறினார். கீழே இறங்க மறுத்த அந்த நபர், "தான் ஒரு காவல்துறை அதிகாரி. என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஒழுங்காக என்னை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
பெண்ணிடம் சில்மிஷம்
இந்நிலையில், கும்பகோணம் மேம்பாலம், நால்ரோடு, புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் நான்கு வழிச் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி "கீழே இறங்கவில்லை என்றால் பேருந்தை எடுக்க மாட்டோம்" என நடத்துனர் கூறினார். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் அவரை சத்தம் போட்டு கீழே இறக்கினர். பின்பு பெண்ணின் உறவினர்கள் வந்து மதுபோதையில் இருந்தவரிடம் சண்டையிட்டனர். பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளலாமா என்று கேட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
அப்போது, அந்த நபர் "பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன். யாரா இருந்தாலும் வர சொல்லு" என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். நான்கு வழிச்சாலையில்இந்த சம்பவம் நடந்ததால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் கும்பகோணம் மேற்கு போலீசார் மதுபோதையில் இருந்த அந்த நபரை இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மற்ற செய்திகள்