'அடுத்த 3 நாட்களுக்கு இதை தவிர்த்திடுங்க'... வானிலை மையம் அறிவுரை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட அனல் காற்று அதிகமாக வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'அடுத்த 3 நாட்களுக்கு இதை தவிர்த்திடுங்க'... வானிலை மையம் அறிவுரை!

கடந்த 5-ந்தேதி தொடங்கிய 'அக்னி நட்சத்திரம்' எனும் கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது. இதையடுத்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உள் தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று அதிகமாக இருக்கும் என்றும், வழக்கத்தை விட வெப்பம் 6 டிகிரி அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுரை கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

HEATWAVES