‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய சிலிண்டர்’... ‘தூள் தூளான கிச்சன்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு அருகே, திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘வெடித்து சிதறிய சிலிண்டர்’... ‘தூள் தூளான கிச்சன்’!

அந்தியூர் அருகே வட்டகாட்டைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக உள்ளார். வீரக்குமார், பணிக்கு சென்ற நிலையில், குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். கூலி வேலை செய்துவரும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றிருந்தார். யாரும் வீட்டில் இல்லாததால், பூட்டியநிலையில் வீடு இருந்துள்ளது.

இந்நிலையில், அவரது வீட்டின் முன்பகுதியில்  சமையலறை இருந்துள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதில் கான்கிரீட்டால் கட்டப்பட்டு சிமெண்ட் கூரை போடப்பட்டிருந்த சமையலறை இடிந்து தூள் தூளானது. தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர், அங்கிருந்த மற்றொரு சிலிண்டரை வெடிக்கவிடாமல், பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

சிலிண்டர் வெடித்தபோது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. எனினும் சிலிண்டர் விபத்தில், வீட்டில் இருந்த லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எதனால் சிலிண்டர் வெடித்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ERODE, LPG, GAS, CYLINDER, EXPLOSION