விமான பயணத்தில் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன் & பெள்ளி.. நெகிழ வச்ச பயணிகள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆஸ்கர் தம்பதியான பொம்மன் மற்றும் பெள்ளி சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது விமானி மற்றும் சக பயணிகள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்கர்
சினிமா கலைஞர்களின் உச்சபட்ச கனவாக இருக்க கூடியது ஆஸ்கர் விருதை வெல்வதாகத்தான் இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைபடங்களை, கலைஞர்களை அங்கீகரித்து விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சையுடன் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இதில் The Elephant Whisperers சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
The Elephant Whisperers
தமிழ்நாட்டின் முதுமலையை களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் யானைகளை பராமரித்து வரும் பொம்மா மற்றும் பெல்லி என்ற தம்பதியினரின் வாழ்க்கை முறை, யானையுடனான அவர்களது பிணைப்பு குறித்து அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அதுமட்டும் இன்றி முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்ற இந்திய குறும்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கான்சால்வேஸ் மற்றும் தயாரித்த குனித் மோங்கா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டார்கள்.
இதனையடுத்து யானை பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் அவரது மனைவி பெள்ளி குறித்த வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தன. அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தார்.
வீடியோ
இந்த சூழ்நிலையில் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி சில தினங்களுக்கு முன்னர் விமான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது, விமானி இருவரையும் சக பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்து, அவர்களுடன் பயணிப்பது பெருமையான தருணம் என உணர்ச்சிகரமாக பேசியிருந்தார். அதன்பிறகு கூப்பிய கரங்களுடன் பொம்மன் மற்றும் அவரது மனைவி எழுந்து நிற்க, சக பயணிகள் கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
Nice gesture @IndiGo6E ❤️#TheElephantsWhisperers #TNForest #BommanBellie pic.twitter.com/szjojWmlFI
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 24, 2023
மற்ற செய்திகள்