'நம்ம தலைவரே வெளிய இருக்குறப்போ...' 'என்ன'லாம் அர்ரெஸ்ட் பண்ணிடுவாங்களா...! - யூடியூப்பர் மதன் 'ஆடியோவில்' சவால்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யூடியூப்பில் ஆபாச வார்த்தைகள் பேசுவதாக எழுந்த புகாரில் தலைமறைவான யூடியூப்பர் மதன் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் சேலத்தை சேர்ந்த மதன், தனது யூடியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் பல சிறுவர் சிறுமிகள் நடுத்தர வயது இளைஞர்களோடு உரையாடி வருபவர்.
விளையாட்டில் இடையில் பெண்களை இழிவாக பேசுவதும், கெட்ட வார்த்தைகள் மற்றும் ஆபாச வார்த்தைகளையும் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இது அந்த சேனலில் விளையாடும் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது அதை பார்க்கும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கும் தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.
மேலும், தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக எழுந்த புகாரில், சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உ ள்ள மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள மதன், தனது ரசிகைகளுடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.
தன் பெண் ரசிகையுடன் பேசிய மதன் நித்தியானந்தவையும் குறிப்பிட்டு, லட்சகணக்கில் செலவிட்டு வழக்கறிஞர்களை வைத்துள்ளதாகவும் யாரும் என்னை எதுவும் பண்ண முடியாது என சவால் விட்டுள்ளார்.
அந்த உரையாடலில் பெண் ஒருவர், உங்கள் புகைப்படம் வெளியிட்டுள்ளார்களே, எனவே உங்களை கைது செய்வார்களா என கேட்டதற்கு, 'நான் புகைப்படம் எடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தபோது நான் எடுத்த புகைப்படத்தை ஒரு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில புகைப்படங்கள் என அண்ணனுடையது.
நான் ஜெயிலுக்கு செல்ல வாய்ப்பில்லை. லட்சக்கணக்கில் இதற்காக செலவு செய்து நம்பர் 1 லாயர்களை வைத்துள்ளேன். டெல்லியிலும் வக்கீல்கள் உள்ளனர். அப்படியே ஜெயிலுக்கு போனாலும், வெளியே வந்து மீண்டும் 'மதன்' யூடியூப் சேனல் தொடங்கி அப்போது இவர்களை கிழிகிழி என கிழித்து தற்போது இருப்பதை விட வேகமாக செயல்படுவேன். என கூறியுள்ளார்.
மேலும் அந்த உரையாடலில் அந்த பெண், 'இதற்கெல்லாம் கைது செய்வார்களா..?' எனக் கேட்டபோது, 'அதானே... நம் தலைவர் நித்யானந்தாவே வெளியில் இருக்கும்போது என்னை கைது செய்து விடுவார்களா என்ன?' என அசால்ட்டாக கூறியுள்ளார்.
இந்த ஆடியோ வெளிவந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த உரையாடல்களை வைத்து மதன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது, யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதன் நடத்தும் யூடியூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பதால் அவரை கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்