தேடிட்டு இருந்த குற்றவாளி வீட்டுக்கு வெளிய இல்ல.. சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சின்ன க்ளூ.. நடுங்க வைக்கும் வாக்குமூலம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஏரியில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட வழக்கில் அவரின் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உங்கள உள்ள விட முடியாது.. வீல்சேரில் வந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த ஹோட்டல்.. என்ன காரணம்?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கடந்த 1-ம் தேதி உயிரிழந்த உடல் அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை காவல் துரைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட போலீஸார் புதைக்கப்பட்ட சடலத்தை வெளியே எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்தனர். அப்போது அது பெண்ணின் உடல் எனவும், அவர் திட்டக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோவனின் மனைவி அன்னபூரணி (55) என்பது தெரியவந்தது.
காவல்துறை விசாரணை:
அதோடு, அன்னபூரணி அணிருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக யாரும் தீர்த்துக் கட்டினார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும், அன்னபூரணியின் உறவினர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
செல்போன் சிக்னல்:
இந்நிலையில், அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் சில நாட்களில் இருந்த செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது, அன்னபூரணியின் அண்ணன் மகன் முருகானந்தம் (வயது 30) என்பவரின் செல்போன் எண்ணும் காட்டியுள்ளது. இதை ஒரு துருப்பு சீட்டாக உபயோகப்படுத்திய போலீசார் அவரை விசாரணை நடத்தியுள்ளனர். தொடர் விசாரணையில் தான் அன்னபூரணியை தீர்த்துக் கட்டியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஒப்புக்கொள்ள மறுப்பு:
அன்னபூரணி பெயரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் பட்டுக்கோட்டையில் உள்ளது. அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, கடந்த 1-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த அன்னபூரணியை தீர்த்துக் கட்டியுள்ளார்.
மேலும், அன்றிரவு அவரது உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தனி நபராக 4 கிலோ மீட்டர் தூரமுள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ததை ஒப்புக்கொண்டார். தற்போது முருகானந்தத்தை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்