'பல்சர் பைக்ல பர்தா போட்டுட்டு வந்த ஆண்...' 'எல்லாத்தையும் முடிச்சிட்டு கிளம்புற வரைக்கும் ஒரு வார்த்தை பேசல...' 'அதுல கெடச்ச தடயம்...' - பட்டப்பகலில் துணிகரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசியில் கடந்த 7-ஆம் தேதி ஜெயபாலன் என்னும் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஜெயபாலன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதை அறிந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி விஜயலட்சுமியை நாற்காலியில் கட்டி வைத்து பீரோவில் இருநது சுமார் 126 பவுன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்க வந்த இரண்டு திருடர்களும் அடையாளம் தெரியாமல் இருக்க பர்தாவுடன் வந்ததாகவும், அவர்களில் ஒருவர் மட்டுமே விஜயலக்ஷ்மியுடன் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடந்தேறிய இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையில் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தகட்டமாக தென்காசி எஸ்.பி.யான சுகுணாசிங் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினார். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன், ரமேஸ் மற்றும் அருண் சுரேஷ் என மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த மொத்த நகைகளும், பணமும் மீட்கப்பட்டது.
இந்நிலையில் திருட்டு வழக்கில் பெரும் மூளையாக செயல்பட்டது மணிகண்டன் எனவும், அவர் தொழிலதிபர் ஜெயபாலனின் சகோதரன் மகன். கேளம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் அவரது நண்பர்களான ரமேஷ் மற்றும் மேலக்கடையநல்லூர் அருண்சுரேஷ் மூவரும் சேர்ந்தே இக்கொள்ளையை நடத்தியுள்ளனர்.
கொள்ளை நடந்த தினத்தன்று, பல்சர் பைக்கை ஒட்டி வந்தவர் ரமேஷ் எனவும், உடன்வந்த மணிகண்டன் அடையாளம் தெரியாமலிருக்க பர்தா அணிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய எஸ்.பியான சுகுணாசிங், கொள்ளையின் போது ஒருவர் மட்டுமே பேசியுள்ளார் இன்னொருவர் பேசவில்லை, நாங்கள் பேசாதவர் உறவினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்தது.
அதுமட்டுமில்லாமல், மணிகண்டன் கொள்ளையடித்த ஒரு நகையை சென்னையில் அடகுவைத்ததும் தெரிய வந்தது. அதைக் கொண்டு அவன் பிடிபட்டதும் கூட்டாளிகள் இருவரும் சிக்கினர். அவர்களிடமிருந்து மொத்த நகையும் மீடகப்பட்டு கார், பைக் கொள்ளைக்குப் உபயோகப்படுத்தப்பட்ட சிம்கார்டு கைப்பற்றப்பட்டதுள்ளது. தொடர் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டோர் வறுமையின் காரணமாக தான் திருடியதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்