முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில், தமிழகத்தில் 8 தாலுகாக்களுடன் உதயமாகியுள்ள புதிய மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருந்நெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தென்காசி, புதிய மாவட்டமாக இன்று உதயமாகியுள்ளது.

முதல்வர், துணைமுதல்வர் முன்னிலையில், தமிழகத்தில் 8 தாலுகாக்களுடன் உதயமாகியுள்ள புதிய மாவட்டம்!

இதன் புதிய மாவட்ட நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு, தென்காசி. திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய 5 ஊர்களும் புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்டத்துக்காக தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கலந்துகொண்டு, அம்மாவட்டத்துக்கான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே நடந்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினர்.

அதுமட்டுமல்லாமல் அம்மாவட்டத்தில் 5 ஆயிரம் பயனாளர்களுக்காக நலத்திட்ட உதவிகளை 80 கோடி ரூபாய் செலவில் வழங்கினார். இதில் விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் சண்முகம், திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ்,பி. சுகுணாசிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

33வது மாவட்டமாக பரிணமித்துள்ள தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்களுடன் உதயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.